Breaking News

கற்பிட்டியில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - எருமதீவு கடற் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று (26) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


வடமேல் மாகாண கடற்படை கட்டளையின் கற்பிட்டி கடற்படையினர் குறித்த தீவு பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட 41 மூடைகளை பரிசோதனை செய்தனர்.


இதன்போது,  குறித்த 41 உர மூடைகளில்  அடைக்கப்பட்ட 1276 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன.


இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 1276 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 41 உரமூடைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.


இதேவேளை, இந்த வருடம் ஜூலை மாதம் வரை 27330 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படை மற்றும் கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.


இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






No comments

note