Breaking News

புத்தளம் - சாஹிரா ஆரம்ப பாடசாலையின் புதிய அதிபர் முஹ்ஸி அவர்களை வாழ்த்தும் ஓய்வு பெற்ற அதிபர் நஜீப்

கரம் பிடித்து

உள்ளத்தை தொட்டு உரைக்கிறேன்

உண்மையை சொல்ல விரும்புகின்றேன்

வல்லோனை போற்றி வாழ்த்துகள் தெரிவிக்க 

வார்த்தைகள் இன்றி தேடுகின்றேன் ; அலைகின்றேன் 


நல்லந்தழுவைக்கு விடிவெள்ளி உதித்தது 

என்ற ஆசையோடு இருந்தேன்

அல்லாஹ்வின் நாட்டம் ஸாஹிரா ஆரம்ப பாடசாலைக்கு உதித்தது


முஹ்ஸி சேர் என்ற நாமம் எமது அக்கரைப்பற்றிற்கே காற்றோடு உலாவ ....

நல்லாந்தழுவைக்கே பெருமை சேர்த்தது


அவர் ஒரு தனிமனிதர் அல்ல....

ஒரு மொழி தெரிந்தால் ஒரு மனிதர் என்பர் ; இவர்

நான்கு மொழி தெரிந்த நான்கு மனிதர் 

வளம் மிக்கவர்

பலம் மிக்கவர்


நூறு நாட்களிலே இலட்சங்களை கொண்டு வந்தவர்

அவரை பெற்றதே ஒரு வரம்


படைத்தவன் பாரினிலே 

பலகாலம் வாழவைத்து 

பறைசாற்றும் பாடசாலையாக 

வரலாறு படைக்க 

வாழ்த்துகிறேன் !!!!!

போற்றுகிறேன் !!!!!!


அல்லாஹ் போதுமானவன்....


உளமாற வாழ்த்தும்

ஓய்வு பெற்ற நல்லந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலை அதிபர்-

N.M.M.நஜீப்




No comments

note