நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 24 வருட காலமாக சேவையாற்றிய திருமதி மெரின் ஆசிரியரின் பணி நிறைவு கௌரவிப்பு மற்றும் சேவைநலன் பாராட்டு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புத்தளம் கல்பிட்டி நாவற்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தியாலயத்தில் 24 வருட காலமாக சேவையாற்றிய திருமதி.மெரின் ஆசிரியரின் பணி நிறைவு கௌரவிப்பு மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவை முன்னிட்டு அண்மையில் (29) நாவற்காடு புனித சிந்தாத்திரை மாதா ஆலயத்தில் உதவிப் பங்குத்தந்தை அருட்பணி ஸ்டனிஸ் அடிகளாரினால் நன்றித்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அடுத்து இந்நிகழ்வானது இனிதே ஆரம்பமானது. திருமதி மெரின் ஆசிரியரின் குடும்பம் சகிதம் பிரமுகர்கள் மாலை அணிவிக்கப்பட்டு மலர்ச்செண்டு வழங்கி வரவேற்கப்பட்டனர்.
பின்னர் மங்கள தீபம் ஏற்றி இறையாராதனையுடன் விழா இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் பீ.ஜெனற்ராஜ் வரவேற்புரையினை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் உதவிப்பங்குத்தந்தை அருட்பணி ஸ்டனிஸ் அடிகளார், தேத்தாப்பளை றோ.க.த.வித்தியாலயத்தின் அதிபர் அருட்சகோதரி டெலிசியா, புத்தளம் வலயக்கல்விப் பணிமனையின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.அனீஸ், ஆரம்பக் கல்வி பாட இணைப்பாளர் வீ.ஈ. அருணாகரன், ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்களான வீ.எஸ்.புஸ்பராஜன், இஸட்.ஏ.சன்ஹீர், ஆசிரிய ஆலோசகர் திருமதி, ஜீ. விஜயலக்ஸ்மி உள்ளிட்ட அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் முக்கிய விடயமாக பணிநிறைவு பெறும் ஆசிரியருக்கான 'கணியமுதம்' என்ற சஞ்சிகையும் வெளியிடப்பட்டது. நுலாய்வினை புத்தளம் வலயக்கல்விப்பணிமனையின் ஓய்வு நிலை உதவிக்கல்விப்பணிப்பாளர்
இஸட்.ஏ.சன்ஹீர் நடாத்தினார்.
இந்நிகழ்வை மேலும் அலங்கரிக்கும் விதத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. அதனைத்தொடர்ந்து விழாவின் முக்கிய தருணமாகிய திருமதி மெரின் அம்மணியை கௌரவிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. பொன்னாடை போர்த்தி அதிபர் உட்பட ஆசியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர்கள் அனைவரும் அன்பளிப்புக்களை வழங்கி ஆசிரியருக்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.
மேலும், இந்நிழ்வில் ஐப்பசி மாதம் பணி நிறைவு பெறப்போகும் வீ.ஈ.அருணாகரன் அவர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments