ஸ்கை தமிழ் விருதுக்கு விண்ணப்பம் கோரல்- 2024
(கற்பிட்டி எம் எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
நாட்டின் சிறந்த ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கும் "ஸ்கை தமிழ் விருது - 2024"க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கட்டாரில் உள்ள ஆளுமைகளை மிக பிரம்மாண்டமான முறையில் கௌரவித்த ஸ்கை தமிழ், இம்முறை இலங்கையிலுள்ள ஆளுமைகளைத் தெரிவு செய்து அவர்களுக்கான கௌரவத்தை வழங்கவுள்ளது
விருது வழங்கப்படும் பிரிவுகள்:
* ஊடகம் மற்றும் பத்திரிகை
* இலக்கியம்
* சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்
* கலை மற்றும் கலாசாரம்
* விளையாட்டுத்துறை
* சமூக சேவை
* வணிகம் மற்றும் தொழில்முனைவோர்
* கல்வி & தொழில்நுட்பம்
* விவசாயம் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவோர் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
இவ்விருதுக்கு நீங்கள் தகுதியானவர் எனக்கருதினால், கீழே தரப்பட்டுள்ள Google விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து உங்கள் சுயவிபரங்களுடன் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களையும் எமக்கு அனுப்பிவையுங்கள்.
விண்ணப்பங்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் எமக்குக் கிடைக்கக் கூடியதாக Google படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.
உங்கள் விண்ணப்பங்களை எமக்கு அனுப்பிவைக்க...
https://forms.gle/Yn2vf8DECFzVUhe59
மேலதிக தகவல்ககளை அறிய : 0757000791 | +97431060249 என்ற வட்ஸ்அப் இலக்கங்களுக்கு அழைப்பதன் மூலம் அல்லது www.awards.skytamilnews.com என்ற இணையத்தள முகவரிகளுக்குச் செல்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
No comments