Breaking News

புத்தளம் - புழுதிவயல் மக்களின் முன்மாதிரியான செயற்பாடு; புழுதிவயல் Whatsapp Community யினால் புத்தளம் தள வைத்தியசாலைக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு!.

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் - புழுதி வயல் WhatsApp Communityயினால்  சேகரிக்கப்பட்ட நிதியின்னூடாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு  சக்கர நாற்காலிகள் இரண்டு இன்று (24) அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.


புழுதிவயல் கிராமத்தில் இயங்கிவருகின்ற "மக்கள் அரங்கம் வட்சப் குழுமம்" ஊடாக நிதி திரட்டப்பட்டு  புத்தளம் தள வைத்தியசாலையில் ஐந்தாம் வாட்டில் நிலவி வந்த சக்கர நாற்காலிகள் பற்றாக்குறை சம்பந்தமான பிரச்சனைக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளது.


அந்தவகையில் புத்தளம் தள வைத்தியசாலை மருத்துவ கண்காணிப்பாளர் (Medical Superintendent) டாக்டர் திலின வணிகசேகர (Dr Thilina Wanigasekera)  அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் மக்கள் அரங்க குழு அட்மின்கள் கே.ஆர்.எம். நபீஸ், எம்.எஸ்.எம். அஸ்பக் மற்றும் உறுப்பினர்களான ஏ.கே.எம். நிப்ராஸ், எம்.எச்.எச். ஹஸ்லான் மற்றும் புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்திச்சங்க  உறுப்பினர் ஜவாத் (சமையற் கலை நிபுணர்) ஆகியோர்  கலந்து கொண்டனர். 


கையளிக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வைத்தியசாலையின் களஞ்சியசாலை பதிவுப் புத்தகத்தில் பதிவேற்றப்பட்டதுடன் நான்காம் ஐந்தாம் வாட்டின்    பாவனைக்கு விநியோகிக்கப்படும் என வைத்தியர் தெரிவித்தார்.


இதேவேளை வைத்தியசாலை சார்பாக அன்பளிப்பு செயத வட்சப் குழுமத்தைப் பாராட்டி  நன்றி தெரிவித்து கொண்டதோடு,  இன்னும் பல குறைபாடுகள் காணப்படுவதாகவும் கூறிய வைத்தியர் இன்னும் பல உதவிகளை எதிர்பார்ப்பதாகக் கூறி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.


இந்த முயற்சிக்கு நிதி உதவி செய்த அனைவருக்கும் மக்கள் அரங்கம் சார்பாக  நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அட்மின்கள் தெரிவித்தனர். உங்களது நல்லெண்ணங்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.






No comments

note