Breaking News

ஐக்கிய தேசிய கட்சியின் கற்பிட்டி பிரதேச சபையின் வலய அமைப்பாளராக றபாத் அமீன் நியமனம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் - கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட கரம்பை, விருதோடை, பாலச்சோலை கிராமங்களை உள்ளடக்கிய நான்காம் இலக்க வலய அமைப்பாளராக விருதோடை ஏ.ஆர்.எம். றபாத் அமீன் ஜனாதிபதியும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று (02) நியமிக்கப்பட்டுள்ளார்.


றபாத் அமீன் பற்றிய  ஒரு கண்ணோட்டம்; புத்தளம் மாவட்டம் கற்பிட்டி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மதுரங்குளி - விருதோடை கிராமத்தைச்  சேர்ந்த இவர் 1979/10/31 ல்  மர்ஹும்களான  ஆர்.ஏ. றசீத், லைலா  உம்மா  தம்பதிகளின் நான்காவது புதல்வராக பிறந்து  விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரம் வரை கல்வி கற்ற இவர். 1999 ல் முதலாவது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக உறுப்புரிமை பெற்றதுடன். தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிக்காக தொடராக அயராது உழைத்த ஒருவர். அதன் நிமித்தம் 2001 ம் ஆண்டு மர்ஹும் பிஸ்ருல் ஹாபியினால் விருதோடைக்கான ஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளராக நியமனம் பெற்றவர். 2002 ம் ஆண்டு அன்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பாலித்த ரங்க பண்டாரவின் வேண்டுகோளுக்கிணங்க நீதியமைச்சர்   அமரர்  டப்ளிவ். ஜே.எம். லொக்குபண்டார அவர்களினால் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து 2007 ம் ஆண்டு புத்தளம் மாவட்டத்தின் ஐக்கிய தேசிய கட்சியின் முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளராக நியமனம் பெற்றார். 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் கற்பிட்டி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் உறுப்பினர் பதவி கைநழுவிப் போனது. மேலும் 2017 ம்  ஆண்டு மற்றும் 2018  ம் ஆண்டு நீர்பாசன நீர் முகாமைத்துவ மற்றும் திறன் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக இருந்த பாலித்த ரங்க பண்டாரவின் புத்தளம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


2018 ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் புறக்கணிக்கப் பட்ட இவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் ஊடாக கற்பிட்டி பிரதேச சபைக்கு நியமிக்கப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளராக பாலித்த ரங்க பண்டார நியமிக்கப்பட்ட பின்பு மீண்டும் அவரின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளராக நியமிக்கப்பட்டு இன்று வரை செயல்பட்டு வரும் விருதோடை ஏ.ஆர்.எம் றபாத் அமீன் இன்று கரம்பை, விருதோடை,  பாலைச்சோலை ஆகிய மூன்று வட்டாரங்களையும் உள்ளடக்கிய வண்ணம் வலய அமைப்பாளராகவும், மற்றும் புத்தளம் மாவட்டம் முழுவதும் ஐ.தே.கட்சியின் புனரமைப்பு செய்யும் வேலைத்திட்டத்திற்கும் இன்று றபாத் அமீனுக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 


மேற்படி நியமனங்கள் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டார மற்றும் கட்சியின் உப தலைவர் அகில விராஜ் காரியவசம் ஆகியயோர்களின் சிபாரிசுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால்  நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.













No comments

note