Breaking News

ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை மற்றும் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் சிநேக பூர்வ சந்திப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை உறுப்பினர்களுக்கும்  புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்தினருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று . நேற்று (04) புத்தளம் பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது 


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் நகர கிளையின் புதிய உறுப்பினர்கள் புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு முதற்கண் தமது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் சமூகம் சார்ந்த ஊர் சார்ந்த பல்வேறு விடயங்களையும் கலந்துரையாடியதுடன்.


உலமாக்களின் முக்கியத்துவம் சமூகத்தின் தேவைப்பாடுகள் என்ற தலைப்பிலும் பல்வேறு விடயங்களும் கலந்துரையாடப்பட்டது 


எதிரவரும் காலங்களில் ஜமிஇய்யத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை புத்தளம் பெரிய பள்ளி நிர்வாகத்துக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.









No comments

note