ஜனாஸா அறிவித்தல் - மதுரங்குளி - மரிக்கார் சேனையைச் சேரந்த பரீதா உம்மா அவர்கள் காலமானார்
கொழும்பை பிறப்பிடமாகவும் மதுரங்குளி - மரிக்கார் சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட காலம் சென்றவர்களான அல்ஹாஜ் அப்துல் சத்தார், ஹாஜியானி ஐநூர் சபீகி ஆகியோரின் அன்பு மகள் பரீதா உம்மா அவர்கள் இன்று (12) காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னார் மதுரங்குளி Gas கடை உரிமையாளர் அல்ஹாஜ் செய்யயது ஹுஸைன் அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற பர்ஷாத், இர்ஷாத், ரஷாத், ஹுஸ்னா, வதீனா ஆகியோரின் அன்புத் தாயும், விருதோடையைச் சேர்ந்த பாயிஸ் அவர்களின் அன்பு மாமியாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (12) மஃரிப் தொழுகையுடன் கடையாமோட்டை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஜனாஸா தற்போது விருதோடை சேனைக்குடியிருப்பு மருமகன் பாயிஸ் அவர்களின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இத்தாய்க்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
நீங்களும் உங்களது பிராத்தனையில் இணைத்துக் கொள்ளுங்கள்.
اللَّهُمَّ اغْفِرْ لَهَا ، وارْحمْها ، وعافِها ، واعْفُ عنْها وَأَكرِمْ نزُلَها ، وَوسِّعْ مُدْخَلَهُا واغْسِلْهُا بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّها منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُا دارا خيراً مِنْ دَارِها، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِا، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِا ، وأدْخِلْها الجنَّةَ ، وَأَعِذْها منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّارِ
No comments