சிறந்த ஆளுமையும், முன்மாதிரியுமிக்க அதிபரின் அரச பணி நிறைவு - அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ழார் (நளீமி)
அறிவு, திறன், நல்ல மனப்பாங்கு கொண்ட நற்பிரஜையை உருவாக்குவதே அரச பாடசாலைகளின் முதன்மை நோக்கு. இந்நோக்கை நிறைவேற்ற வேண்டிய நேரடி பொறுப்பாளர்களான ஆசிரியர்களும், அதிபர்களும் அறிவு, திறன் என்பவற்றோடு மிக முக்கியமாக நல்ல மனப்பாங்கு கொண்டவர்களாக இருப்பது மிக மிக அவசியம். அவ்வாறானவர்களால் தான் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பிரயோசனமுள்ள நற்பிரஜைகளை உருவாக்க முடியும். இப்படியான சிறந்த முன்மாதிரிமிக்க அதிபர்களும், தலைவர்களும் குறைந்து வருவது கவலையளிக்கிறது.
அந்த வகையில் என் அன்புக்குரிய நண்பர், சகோதரர் என். எம்.எம்.நஜீப் அவர்கள் புத்தளம்- நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்பப் பாடசாலையை அதன் ஸ்தாபக அதிபராகப் பொறுப்பேற்று சுமார் ஒரு தசாப்த காலம் கடமையாற்றி 2024.06.20 ஆம் திகதி அன்று அரச பணி நிறைவு பெற்றார். இவர் திறமை, அறிவு, நல்ல மனப்பாங்கு, பன்முக ஆளுமை,மொழியாற்றல், தியாகம்,துடிப்பு என்பவற்றை இறை அருளாகப் பெற்று, பல் இனமக்களதும், அதிகாரிகளதும் உள்ளங்களை வென்ற சிறப்பான ஒரு முன்மாதிரி அதிபராக பணியாற்றியுள்ளார்.
வல்லவன் அல்லாஹ் அவரது அனைத்து நல்லெண்ணங்களையும், நற்செயல்களையும் பொருந்திக் கொள்வானாக! அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆரோக்கியமான நீண்ட ஆயுளை கொடுத்தருள்வானாக!
அவரது பணி தொடர பிரார்த்தனைகள்! வாழ்த்துக்கள்!.
அஷ்ஷெய்க் எம்.எம்.எம்.மிஹ்ழார் (நளீமி)
அதிபர் - பு/சமீரகம முஸ்லிம் வித்தியாலயம், தலைவர் அ.இ.ஜ. உலமா (புத்தளம் - அக்கரைப்பற்று - மதுரங்குளி).
No comments