தங்கப் பதக்கம் பெற்றமைக்காக சான்றிதழ் வழங்கல்.
(புத்தளம் எம்.யூ.எம். சனூன்,கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
கல்பிட்டி பிரதேசத்தில் 2021 மற்றும் 2023 ம் ஆண்டுகளில் சுற்றாடல் முன்னோடி தங்கப் பதக்கம் பெற்ற 25 மாணவர்கள் புதன்கிழமை (05) காலை கௌரவிக்கப்பட்டனர்.
கல்பிட்டி வை.எம்.எம்.ஏ. அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வைபவம் கல்பிட்டி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து கொண்டார்.
சிறப்பு அதிதிகளாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடமேல் மாகாண பணிப்பாளர் டீ.எம்.கே. திசாநயக்க, புத்தளம் மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சிரேஷ்ட உத்தியோகத்தர் பீ.எம்.ஐ. சமீர,
புத்தளம் மாவட்ட சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் ஏ.எச்.எம்.ஷாபி, கல்பிட்டி கோட்ட சுற்றாடல் ஆணையாளர் எச்.எம். சுஹைப், வேர்ல்ட் விஷன் நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் ரொஷான், பிரதேச செயலகத்தின் சுற்றாடல் அதிகாரி எச்.ருஸ்னி, செடோ நிறுவனத்தின் பணிப்பாளர் முனாஸ், ஸ்டர்போட் சர்வதேச பாடசாலையின் பிரதி அதிபர் எம்.ஆர்.பி.ருக்ஸானி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
முன்னோடி தங்கப் பதக்கங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு இதன் போது அதிதிகளினால் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
No comments