Breaking News

புத்தளத்தில் நாளை அழிக்கப்படவுள்ள பெருந்தொகையான கொக்கேய்ன் போதைப் பொருள்...!

ரஸீன் ரஸ்மின்


நீதிமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நிறைவடைந்த 355 கிலோ 881 கிராம் கொக்கேய்ன் போதைப் பொருளை நாளை (8) சனிக்கிழமை புத்தளத்தில் அழிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இவ்வாறு அழிப்பதற்கு திட்டமிடப்பட்ட குறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் கடந்த 2022 மார்ச் மாதம் 23 ஆம் திகதி கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த நிலையில் குறித்த போதைப்பொருள் நாளை (08) காலை 10 மணியளவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர்களது பங்குபற்றலுடன் புத்தளம், வன்னாத்தவில்லு லெக்டோஸ் வத்தை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போதைப் பொருட்களை அழிக்கும் அதிக சக்திவாய்ந்த உலையில் போட்டு மேற்படி கொக்கேய்ன் போதைப் பொருள் அழிக்கப்படவுள்ளது.


இவ்வாறு அழிக்கப்படவுள்ள கொக்கேய்ன் போதைப் பொருளை நாளை காலை 6 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இருந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் பொறுப்பெடுத்து புத்தளத்திற்கு எடுத்து வரவுள்ளனர்.




No comments

note