கற்பிட்டி நுரைச்சோலை பாடசாலையில் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
(கற்பிட்டி எம்.எச் எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றுவரும் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஒன்றாக தரம் 5 புலமை பரீட்சை எழுத தயாராகிவரும் பிள்ளைகளையும் அவர்களின் பெற்றோரையும் உரிய முறையில் உளரீதியாக தயார்படுத்துவதற்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்று எதிர்வரும் 2024 ஜூலை 6 சனிக்கிழமை பாடசாலையின் அதிபர் எம்.ஐ.எம் இமாரான் தலைமையில் பாடசாலையின் வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த உளவியல் வழிகாட்டல் நிகழ்ச்சியில் இலங்கையின் தலைசிறந்த உளவியல் பயிற்சிவிப்பாளரான எம்.என்ஆலீப் அலி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்காக தனித்தனியாக வெவ்வேறு தலைப்புகளில் மேற்படி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடாத்தவுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் நோக்கம் தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதுடன் மாணவர்களின் மார்க்கத்துடன் கூடிய ஒழுக்கவியல் நடத்தை மாற்றத்தையும் எதிபார்ப்பதுடன், பெற்றோர்களுக்கும் தமது பிள்ளைகளை உரிய முறையில் வழிநடத்தும் பயிற்சியையும், ஆரம்பபிரிவு ஆசிரிய ஆசிரியைகளுக்கு சுவாரசியமான நவீன கற்பித்தல் முறைமைகளை அறிமுகப்படுத்தவதாகும்.
இந்நிகழ்ச்சியில் தரம் 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
No comments