புத்தளத்தில் பாரம்பரிய விளையாட்டுப் போட்டி.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
புனித ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு புத்தளம் முள்ளிபுரம் Black Fire குழுவினரின் ஏற்பாட்டில் பாரம்பரிய கயிறு இழுக்கும் போட்டிகள் பெருநாள் தினத்தன்று மாலை முள்ளிபுரம் முஸ்லிம் மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் உப்பு உற்பத்தியாளர் நலன்புரிச் சங்க தலைவரும், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ரனீஸ் பதூர்தீனின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கயிறுழுத்தல் போட்டியில் புத்தளம் நகர குழுக்கள் மட்டுமல்லாது மாவட்ட மட்டத்திலிருந்தும் பல அணிகள் கலந்து கொண்டதுடன் முதலிடத்தை சிலாபம் அணியும், இரண்டாமிடத்தை புத்தளம் பாஷா பாய் அணியும், மூன்றாமிடத்தை சில்வர்லைன் அணியும் பெற்றுக்கொண்டன.
வெற்றியீட்டிய அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
பார்வையாளர்களின் பெரு வரவேற்பைப் பெற்ற இவ்வாறான பாரம்பரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளுக்கு முன்னாள் நகர சபைஉறுப்பினர் ரனீஸ் பதூர்தீன் தொடர்ந்து தனது பங்களிப்புக்களையும் ஒத்துழைப்பையும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
No comments