நான் கண்ட திறமையான வழிகாட்டி நஜீப் அதிபர் - முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் எம். ஐ.எம். ஆஷிக்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் - நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபர் என்.எம்.எம். நஜீப் கடந்த வியாழக்கிழமை (20) ஓய்வு பெற்றார். அவர் பற்றி கருத்து தெரிவித்த கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் எம்.ஐ.எம். ஆஷிக்.
ஆரம்பத்தில் ஆசிரியராக கடமை ஆற்றிய இவர் குறுகிய காலத்தில் புத்தளம் - நல்லாந்தழுவை முஸ்லிம் ஆரம்ப பாடசாலையின் அதிபராக பொறுப்பேற்று அந்த பாடசாலையினை வழி நடத்துவதிலும் ஆசிரியர்களை அரவணைத்து செல்வதிலும் சிறப்பாக தனது பணியை செய்தவர்.
மாணவச் செல்வங்களை தன் பிள்ளைகள் போன்று வழி நடத்துவதும், அரசியல் தலைமைகளை அன்போடு வரவேற்பதும், பெற்றோர்களுடன் ஒன்றிணைந்து பாடசாலைகளுக்கு தேவையான விடயங்களையும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல்
பாடசாலையில் சாதித்த மாணவர்களுக்கு தன்னால் இயன்ற முறையில் அன்பளிப்புகளை கொடுப்பதற்கான வழிகளை ஏற்படுத்தல் அத்தோடு ஊக்குவிப்புகளையும் பெற்றுக் கொடுத்து சிறந்த முன்மாதிரியான சமுதாயத்தை உருவாக்குவதற்கு நேரம் காலம் பாராது தனது வாழ்க்கையை கல்விக்காகவும், கல்வி சமுதாயத்தை உருவாக்குவதற்காகவும் நிலையாய் நின்று உழைத்து விட்டு பாடசாலை சமூகத்தை விட்டு விடை பெற்றுள்ளார். ஓய்வு பெற்றிருக்கின்றார் என்பதை நினைத்தால் இவ்விடத்திற்கு இவரை போன்றொருவர் உருவாகுவதா? உருவாகுவாரா? என்பதை நினைக்கும் போது கவலையில் மனம் குமருகின்றது. அவருடைய வாழ்க்கை நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று நோக்கத்திலே இருந்து இந்த பாடசாலை சமுதாயத்தை விட்டு வெளியேறிச் சென்று விட்டார். அவருடைய வாழ்க்கை செழிப்பாக வாழ வல்ல இறைவனை பிரார்த்திப்பதோடு அவரிடம் கற்ற மாணவர்கள் என்றும் அவருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள்விடுத்துள்ளார்.
No comments