ஜம்மியத்துல் உலமா புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறை வழிகாட்டல் நிகழ்வு
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் ஏற்பாட்டில் (06) வியாழக்கிழமை புத்தளம் பெரிய பள்ளியில் பிறை பார்ப்பதற்கான வழிகாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வின் தொகுப்பாளராக கொழும்பு பெரிய பள்ளியின் பிறைக்குழு நிர்வாகத்தின் உதவி செயலாளர் அஷ்ஷெய்க் எம். ஆர். அப்துர் ரஹ்மான் (ஹிலாலி) கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் புத்தள நகர எல்லையில் உள்ள அனைத்து மத்ரஸா மாணவர்கள் மற்றும் உஸ்தாத்மார்களும் கலந்து கொண்டனர்.
நாகவில்லு புகாரிய்யா மத்ரஸா, ரத்மல்யாய
மிஸ்பாஹூல் உலூம், தில்லையடி முஹாஜிரீன் மத்ரஸா, புத்தளம் காஸிமிய்யா மத்ரஸா,
இஹ்யாவுல் உலூம் மத்ரஸா,
அப்துல் மஜித் எகடமி,
அஷ்ரபிய்யாஹ் மத்ரஸா,
தாருல் குர்ஆனுல் கரீம் மத்ரஸா ஆகியவற்றின் உஸ்தாத்மார்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஏனைய உலமாக்கள், சமூக நலன்விரும்பிகள் மற்றும் இதுவரைக்கும் பிறைப்பார்த்து வந்த குழுக்களின் அங்கத்தவர்கள் என சுமார் 125 பேர் இதில் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்ட அனைவருக்கும் கலந்து கொண்டதற்கான சான்றிதழ்கள் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளையின் உறுப்பினர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
No comments