கற்பிட்டி கண்டக்குளி பாடசாலையின் தேவைபாடு குறித்து ஆளுநருடன் சிநேக பூர்வ கலந்துரையாடல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி கண்டக்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கல்வி அபிவிருத்தி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை சம்மந்தமாக வடமேல் மாகாண ஆளுநருடன் சிநேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று ஆளுநர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்றது.
இதில் கண்டக்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உறுப்பினர் அஹ்சன் அவரின் அழைப்பின் பேரில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம் றியாஸ் கலந்து கொண்டார்.
வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமடின் காரியாலயத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் கற்பிட்டி கண்டக்குளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் பாடசாலையின் ஆசிரியர் பற்றாக்குறை என்பன பற்றி விரிவாக கலந்துரையாடியதாகவும் ஆளுநரிடம் இருந்து சாதகமான பதில்கள் கிடைக்க பெற்றதுடன் விரைவில் பாடசாலையின் குறைகளை தீர்த்து தருவதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது எனவும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் உறுப்பினர் அஹ்சன் தெரிவித்தார்
No comments