நாட்டில் பத்து புதிய தாவரவியல் பூங்காக்கள் அமைக்க திட்டம்
(எமது நிருபர்)
காலநிலை வலயங்களை அடிப்படையாக கொண்டு 10 புதிய தாவரவியல் பூங்காக்கள் அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
காலி, வவுனியா, பொலன்னறுவை, அம்பாறை மற்றும் தெனியாய உள்ளிட்ட பகுதிகளில் புதிம தாவரவியல் பூங்காக்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் இந்த பூங்காக்களை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் .
No comments