Breaking News

கற்பிட்டி - தளுவையில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு...!

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - தளுவ பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒருதொகை பீடி இலைகள் நேற்று முன்தினம் (15) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.


மேலும் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 42 ,  44 வயதுடையவர்கள் எனவும், இவர்கள் மன்னார் மற்றும் மதுரங்குளி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


வடமேற்கு கடற்படை கட்டளையின் கற்பிட்டி - உச்சமுனை கடற்படையினரால் தளுவ  பிரதேசத்தில் விஷேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதே குறித்த பீடி இலைகள் அடைக்கப்பட்ட உர மூடைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.


இதன்போது, 19 உர மூடைகளில் அடைக்கப்பட்ட 702 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


மேலும், குறித்த பீடி இலைகளை தளுவ பகுதியில் இருந்து வேறு ஒரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு பநன்படுத்தப்பட்டதாக கூறப்படும் முச்சக்கர வண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.


இவ்வாறு கடற்படையினரால், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், கைப்பற்றப்பட்ட 702 கிலோ கிராம் பீடி இலைகள் மற்றும் முச்சக்கர வண்டி என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


கடந்த சில மாதங்களில் கற்பிட்டி பிரதேசத்தில் பத்தலங்குண்டு, இப்பந்தீவு, கீரிமுந்தல், மாம்புரி, தேத்தாப்பொல  மற்றும் தளுவ உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபா பெறுமதியான பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments

note