Breaking News

நுரைச்சோலை - இலந்தையடியில் கடல் அலையில் சிக்கி மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு...!

ரஸீன் ரஸ்மின்

கற்பிட்டி - நுரைச்சோலை, இலந்தையடி பகுதியில் இயந்திரப் படகு மூலம் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவரின் இயந்திர படகு அலையில் சிக்கி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நுரைச்சோலை - இளந்தையடி  பகுதியைச் சேர்ந்த டபிள்யூ. ரணில் பெர்னாண்டோ (வயது 33) எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்த மீனவர், மீன்பிடித் தொழிலுக்காக இயந்திர படகில் நேற்றுமுன்தினம் தனது நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற போது, இயந்திரப் படகு பெரும் அலையில் சிக்குண்ட நிலையில் நீரில் மூழ்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்போது அவருடன் பயணித்த ஏனைய மீனவர்கள் நீரில் மூழ்கிய மீனவரை உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.


புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் , சடலம் மீதான மரண விசாரணையை நடத்தியதுடன், நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கி, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.


இந்த சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரனைகைளை மேற்கொண்டு வருகின்றனர்.




No comments

note