Breaking News

மாதம்பையில் மூடப்பட்டிருந்த உப தபால் நிலையத்திற்கு உயிரூட்டிய பா.உ அலி சப்ரி ரஹீம்

(கற்பிட்டி எம்.எச் எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ எம் சனூன்)

மாதம்பை பழைய நகரத்தில் உள்ள உப தபாலகம் கடந்த ஒன்றரை வருட காலமாக மூடப் பட்டிருந்ததால் அப்பகுதி மக்கள் மிகவும்  சிரமத்தை எதிர்நோக்கி வந்தனர். இது விடயமாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின்   கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது 


 பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து குறித்த தபால் நிலையம் மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 12 ம் திகதி  குறித்த உப தபாலகம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பிரத்தியேக செயலாளர் ஜமால்தீன் ஜவ்ஸி, புத்தளம் மாவட்ட தபால் கண்கானிப்பாளர் எச்.எம்.ஏ.ஜே பண்டார, ஓய்வூதிய சங்கத்தின் தலைவர் எம். நதுன் பெரேரா, மாதம்பை ஜும்ஆப் பள்ளிவால் பரிபாலன சபைத் தலைவர் எம்.எப்.எம். அரபாத் மற்றும் ரிஸ்வான் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள், முன்னாள் சிலாபம் பிரதேச சபை உறுப்பினர் எம்.டி.எம். தஸ்லீம், ஹிஸாம், ஜிப்னாஸ், அஸ்லம்  மற்றும் மாதம்பை பிரதேசவாசிகள் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.









No comments

note