நுரைச்சோலை பாடசாலையின் ஆரம்ப பிரிவில் நட்சத்திர சின்னம் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் (தே.பா) ஹஸனாத் ஆரம்பப்பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் மாணவர்களின் அடைவு மட்டத்தை உயர்த்தும் வேலைத்திட்டத்தில் தரம் 5 மாணவர்களுக்கான “நட்சத்திர சின்னம்” வழங்குவதற்கான பரீட்சையில் இலக்கை அடைந்த மாணவர்களிற்கான நட்சத்திர சின்னம் வழங்கும் நிகழ்வு இன்று (06) ஹஸனாத் ஆரம்ப பிரிவு வளாகத்தில் பிரதி அதிபர் எச்.எம் றசீன் தலைமையில் இடம்பெற்றது.
மாணவர்களின் திறமைகளை உடனுக்குடன் பாராட்டவும், அவர்களை ஊக்குவிக்கவும் இச்செயற்றிட்டம் கடந்த ஆண்டுமுதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments