Breaking News

கற்பிட்டி இல்மா ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

கற்பிட்டி இல்மா ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இன்று (01) பாடசாலையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம் வீ.எம் றஹீம் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.டி.எம் பைறூஸ்ஸமான் கலந்து கொண்டார்.


கல்வி நடவடிக்கைகளின் இணைபாட  விதான செயற்பாடுகளாக காணப்படும் மேற்படி சிறுவர் சந்தை நிகழ்வானது சிறுவர்கள் அறிவையும் அனுபவத்தையும்  பெற்றுக் கொள்வதற்கான ஒரு செயற்பாடு ரீதியான ஒரு வேலைத்திட்டமாகும் என பணிப்பாளர் இதன் நோக்கத்தை குறிப்பிட்டார்.


அதனைத் தொடர்ந்து பிரதம அதிதி தனது  உரையில்  மாணவ சிறார்களை விடவும் அவர்களின் பெற்றோர்களாகிய நீங்கள் கடைபிடிக்க வேண்டிய நேரமுகாமைத்துவம் மற்றும் பிள்ளைகளின் நடத்தை விடயங்களில் இன்றைய கால கட்டத்தில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டியவர்களாக இருப்பதனை மிகவும் வலியுறுத்தி குறிப்பிட்டார் .


கற்பிட்டி  இல்மா ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை கடந்த 21 வருடங்களாக இடம்பெற்று வருவதாகவும் இதற்கு முழு ஏற்பாடு மற்றும் ஒத்துழைப்பு க்களை வழங்கி வரும் இல்மா பாலர் பாடசாலையின் பொறுப்பாளர் டபிள்யூ. எஸ்.ஐ சிறீவந்தி பெர்னான்டோ ஆசிரியர்களான எம்.என்.ஜே ஹஸீன், எம்.என்.எப் நஸ்ரத் சுஹா, எம்.என் ஆகீலா பானு, எம்.எல்.எப் சஹீரா மற்றும் பயிலுனர்களாக கடமையாற்றும் ஆர்.எப் அப்ரா, ஏ.ஜே வருனீ, ஐ.ஏ.எப் நவ்ரின் ஆகியோருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.வீ.எம் றஹீம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.











No comments

note