ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை உறுப்பினர்களுக்கும் புத்தளம் நகர சபை செயலாளருக்கும் இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை உறுப்பினர்களுக்கும் புத்தளம் நகர சபை செயலாளருக்கும் இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு ஒன்று நேற்று புதன்கிழமை (05.06.2024) புத்தளம் நகர சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் புத்தளம் நகர கிளையின் மூலம் புத்தளம் சமூகத்திற்காக இடம்பெறும் சமூகம் சார்ந்த அனைத்து விடயத்திலும் நகர சபை தமது ஒத்துழைப்புக்களையும் உதவிகளையும் வழங்குவதற்கு எப்போதும் தயாராக உள்ளது எனவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளை உறுப்பினர்களுக்கும் தமது வாழ்த்துக்களையும் புத்தளம் நகர சபை செயலாளர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments