கல்குடா தொகுதி தச்சுத் தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணி பிரநிதிதிகள் ஆளுனருடனான சிநேகபூர்வ சந்திப்பு.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
கல்குடா தொகுதியின் தச்சுத் தொழிலாளர் சங்கம், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் கல்குடாதொகுதி செயற்பாட்டாளர்கள் என்பவற்றின் பிரதிநிதிகள் குருநாகல் நகரில் அமைந்துள்ள வடமேல் மாகாண ஆளுனரின் அலுவலகத்தில் ஆளுனர் நஸீர் ஹாபிஸ் அவர்களைச் சந்தித்து சிநேகபூர்வ கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சூழலுக்குப் பாதிப்பு அற்ற வகையில் மர ஆலைகளை செயற்படுத்தல், தச்சுத்தொழில்துறையை நவீன மயப்படுத்தி, புதிய இடமொன்றில் அதற்கான வசதிகளைச் செய்துகொடுத்தல், கல்குடா தொகுதியின் தச்சுத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களின் உற்பத்திகளுக்கான வெளி மாவட்ட சந்தைகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தச்சுத் தொழில்துறையின் மேம்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் என்பன குறித்து கவனம் செலுத்தப்பட்டது
கல்குடா தொகுதியில் தச்சுத் தொழில்துறையானது மிக நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டது என்று குறிப்பிட்ட வடமேல் மாகாண ஆளுனர் நஸீர் அஹமட்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் வளங்கள் மற்றும் தொழிற்துறைகளை உரிய மேம்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டால், மாவட்டத்தினை குறுகிய காலத்திற்குள் அபிவிருத்தி செய்வதற்கான வழிபிறக்கும் என்று சுட்டிக் காட்டினார்.
அத்துடன், கடந்த காலங்களில் போன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில் முயற்சியாளர்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு சந்தைவாய்ப்புகள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தன்னாலான அனைத்து பங்களிப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.
இந்த சந்திப்பின்போது கல்குடா தச்சுத்தொழிலாளர் சங்கத்தின் நிர்வாக குழு மற்றும் அதன் முக்கிய அங்கத்தவர்கள், ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் அதன் முக்கிய பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments