Breaking News

சிலாபத்தில் இடம்பெற்ற “வெல்வோம் ஶ்ரீலங்கா” நடமாடும் சேவையில் பா உ. அலி சப்ரி ரஹீம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் சிலாபம் ஷேர்லி கொரேயா விளையாட்டரங்கில் நேற்றும் (14), இன்று 

ம்(15) நடைபெற்ற “வெல்வோம் ஶ்ரீலங்கா” நடமாடும் சேவை வேலைத்திட்டத்தில் நேற்றைய நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதிதியாக கலந்து சிறப்பித்தார். இதன்போது புத்தளம் மாவட்டத்தில் உள்ள 16 பிரதேச செயலகங்களில் காணப்படும் பாடசாலைகளுக்கு "ஸ்மார்ட் போட் " வழங்கி வைக்கப்பட்டது.


 ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கரு திட்டமான டிஜிட்டல் மயமாக்கலுடன் தொடர்புடைய புதிய தொழில் உலகத்திற்கு ஏற்ற ஸ்மார்ட் தொழிலாளர்களை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்ட இந்த நடமாடும் சேவை தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் தலைமையில் நாடளாவிய ரீதியில் தேசிய  வேலைத்திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


“வெல்வோம் ஶ்ரீலங்கா” மக்கள் நடமாடும் சேவையானது இது வரை பதினாறு மாவட்டடங்களில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் மக்கள் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளதுடன் மக்கள் மத்தியில் நன்மதிப்பையும் பெற்று வருகின்றது. 


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து இணை நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து நடத்தும் இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றன


தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளன. எனவே, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மற்றும் அதன் இணை நிறுவனங்களின் கொழும்பு பிரதான காரியாலயத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய சேவைகள் சிலவற்றை இப்பகுதி மக்கள் இந்த நடமாடும் சேவையின் ஊடாக பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.









No comments

note