கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உள்ளக வீதி அமைப்பதற்கான அங்குரார்ப்பணமும், மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பும்.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் - தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் உள்ளக வீதி அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வும், தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் இடம்பெற்றது.
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமமின் எண்ணத்தில் உதயமான "அறிவால் உலகை ஆள்வோம் அறிவார்ந்த சமூகமே எமது இலக்கு” என்ற தொனிப்பொருளை அடிப்படையாகக் கொண்ட புத்தளம் பீ.சீ.எம்.எச். நிதியத்தின் பங்களிப்புடன் இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை பாடசாலையில் அமையப்பெற்றுள்ள மர்ஹும் அஷ்ஷெய்க் அரூஸ் (கபூரி) அவர்களின் ஞாபகார்த்த கேட்போர் கூடத்திற்கான கூரை அமைப்பதற்கு சுமார் 35 இலட்சம் ரூபா நிதி பாராளுமன்ற உறுப்பினரால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட வேளைகள் இன்று ஆரம்பித்து வைத்ததோடு, பாடசாலையின் 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான உள்ளக வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.எம்.பைஸர் மரிக்கார், கனமூலை பெரிய பள்ளியின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம்.நஜீம் (ஷர்கி), மற்றும் அரசியல் பிரமுவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பழை மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments