இம்முறை உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் வடமேல் மாகாணத்தில் புத்தளம் கல்வி வலயத்திற்கு இரண்டாம் இடம்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
இம்முறை வெளியாகியுள்ள க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் பகுப்பாய்வு, தரவுகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில்
இவ்வருடம் புத்தளம் கல்வி வலயம் வடமேல் மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
முதலாம் இடத்தை குளியாபிட்டி கல்வி வலயம் பெற்றுள்ளதுடன் முதலிடம் பெற்ற வலயத்தோடு ஒப்பிடும்போது *0.05 %* வீதமே புத்தளம் கல்வி வலயத்தின் வித்தியாசம் காணப்படுகிறது
இந்த வெற்றிக்காக பல பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பின் விளைவே என்பதாக குறிப்பிடும் புத்தளம் வலய கல்வி பணிமனை
பிள்ளைகளின் வாழ்வை வெல்ல வேண்டும் என்ற உண்மையான குறிக்கோளுடன் இரவும்,பகலும் தம்மைத் தியாகம் செய்து ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய ஆலோசகர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றது.
No comments