நற்குணம், நற்பண்பு , அமைதி, ஆளுமை, ஆற்றல் மிக்க சிறந்த அதிபராக திகழ்ந்தவர் - சேவை நலன் பாராட்டு விழாவில் எஸ். ஆப்தீன் எஹியா தெரிவிப்பு!.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
புத்தளம் நல்லாந்தழுவை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபர் என்.எம்.எம். நஜீப் கடந்த 2024.06.20 ஆம் திகதி ஓய்வு பெற்றார். அதனையொட்டி பாடசாலையின் ஸ்தாபகத் தலைவரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான எஸ். ஆப்தீன் எஹியா அதிபரின் சேவை நலன் பாராட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தனதுரையில் தெரிவித்ததாவது..
நல்லாந்தழுவை கிராமத்துக்கு என்று ஒரு பாடசாலை இல்லாமல் ஊருக்கே ஒரு கண்ணை இழந்தது போல் நீண்ட காலமாக மன அழுத்த சூழ்நிலையில் 2013 ஆம் ஆண்டு அதற்கான அனுமதியைப் பெற்று ஒரு பாடசாலையை ஒரு சிறிய பள்ளியிலே ஆரம்பிக்க எடுத்த முயற்சி அல்லாஹ்வின் கிருபையைக் கொண்டு வெற்றியளித்த போது அவ்வாறு நீண்ட காலத்திற்குப் பிறகு கிடைத்த அந்தக் குழந்தை நல்லாந்தழுவைக்கு கிடைத்த அந்த ஹக்கை அந்தக் குழந்தையை மிகப் பொறுப்பாக வளப்படுத்தி வளர்த்தெடுக்க ஒரு தகுதியான ஒருவரை நாம் தேடி அழைந்தோம்.
அந்த சந்தப்பத்தில் அதிபர்களுக்குள், நற்குணம், நற்பண்பு, அமைதி, ஆளுமை, ஆற்றல், மிகநிதானமாக கையாளுகின்ற தன்மை எல்லோரையும் கவர்ந்து, அனுகி, விட்டுக் கொடுப்புகளோடு மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுத்து தன் மீது அன்பை செலுத்த முற்படுகின்ற மிக பக்குவமான எல்லா கதா பத்திரங்களையும் கொண்டவர்தான் எனது அன்புக்குரிய என்.எம்.எம். நஜீப் அதிபர் அவரை இந்த நல்லாந்தழுவை பாடசாலைக்கு முதன்முதலாகக் கொண்டு வந்து அவரிடம் பொறுப்புக்களை அமானிதத்தை ஒப்படைத்த போது நான் அன்றும் இதை எவ்வாறான சூழ்நிலையை உருவாக்கும் எவ்வாறான சாதகங்களை ஏற்படுத்தும் என்று எனக்குள் சில ஆதங்கங்கள் இருந்தன ஆனால் பாடசாலை வளம்பெற்ற பாடசாலை படிப்படியாக அபிவிருத்தியடைந்து இன்று இப்பிரதேசத்திலிருக்கின்ற ஐம்பது ஆண்டுகள் பூர்த்தி செய்த ஒரு பாடசாலை போன்று தரமான ஒரு பாடசாலையாக காட்சியளிப்பதற்கு என் அன்புக்குரிய பாடசாலையின் ஆரம்ப அதிபர் என்.எம்.எம்.நஜீப் அவரின் பங்கு என்பது மகத்தானது அது என்னால் என்னிலடங்க முடியாது,
அரசாங்கத்தின் நேரத்திற்கு மாத்திரம் பாடசாலைக்கு வருகின்ற அதிபருக்குள் இந்தப் பாடசாலையை தன் வீடாகவே கருதி தன் நேரம், காலங்கள் தெரியாமல் அந்தப் பாடசாலையிலே தன்னை அர்பணித்த ஒருவர். அவர் இன்று தன்னுடைய 60 ஆவது வயதிலே ஓய்வு பெறுகிறார். அரசாங்கத்தின் சட்டத் திட்டங்களுக்கமைய இல்லை என்றால் அவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் இந்தப்பாடசாலையிலிருந்தே அவர் தன்னுடைய இந்தப் பணியை செய்ய முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்ற இந்த சூழ்நிலையில் எது உண்மையாக இருந்தாலும் ஓய்வு பெற்றுச் செல்லுகின்ற எங்களுடைய அதிபர் எம் வாழ்நாளில் நாம் என்றும் மறவாத பாசத்தையும், அன்பையும் வைத்திருக்கின்ற இந்த நிலையில் அவர் நீண்ட ஆயுளோடு, ஆராக்கியத்தோடு, கௌரவத்தோடு இந்த மண்ணிலே வளம் வரவேண்டும் அதே போன்று இந்தப் பாடசாலையில் ஓய்வு பெற்றுச் சென்றாலும் இந்தப் பாடசாலையை தன்னுடைய பிள்ளையாக தொடர்ந்தும் அவதானித்து பங்களிப்பு செய்ய வேண்டும். அதற்காக நாம் இதய சுத்தியோடு பணி செய்ய கடமைப்பட்டிருக்கின்றோம். என்றார்.
No comments