உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளை ஏற்பாடு செய்த உலமாக்களுக்கான ஹஜ் பெருநாள் சிநேகபூர்வமான சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (23) இஷா தொழுகையுடன் புத்தளம் முஹைத்தீன் ஜும்ஆ பள்ளிவாசலில் (பெரியப்பள்ளி) ஜம்இய்யத்துல் உலமாவின் புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி தலைமையில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டத்தின் முன்னால் தலைவர் அஷ்ஷேக் அப்துல்லாஹ் ஹஸரத் மூலமாக உலமாக்களின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் சில விடயங்கள் ஞாபகப்படுத்தப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் மாவட்டம் தலைவர் அஷ்ஷேக் தமீம் ரஹ்மானி ஜம்இய்யத்துல் உலமா சபையின் முக்கியத்துவம் பற்றி தெளிவுப்படுத்தப்பட்டு உலமாக்களுக்களுக்கிடையில் கருத்து பரிமாற்றல்களும் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் உப தலைவர் அஷ்ஷேக் ஸவ்கி பஹ்ஜீயின் நன்றி உரையுடன் ஒருவருக்கு ஒருவர் முஸபஹா முஆனகா செய்து கப்பாரத்துல் மஜ்லிஸ் துஆவுடன் ஒன்றுகூடல் நிறைவு பெற்றது
இதில் புத்தளத்தில் உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட உலமாக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments