புத்தளம் தில்லையடி ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. சின்னப்பள்ளி மையவாடி சிரமதானமும் பாதை புனரமைப்பும்
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
புத்தளம் தில்லையடி ரத்மல்யாய வை.எம்.எம்.ஏ. சின்னப்பள்ளி மையவாடியை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (31) இடம்பெற்றது.
அத்தோடு அன்றைய தினமே குறித்த மையவாடிக்கு செல்லும் பாதையும் புனரமைப்பு செய்யப்பட்டது.
இச் சிரமதானம் மற்றும் மையவாடிக்கு செல்லும் பாதை புனரமைப்பு பணியில் இளைஞர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர்.
மேற்படி பணிகளில் ஆர்வத்தோடு பங்கேற்ற அனைவருக்கும் ஏற்பாட்டு குழுவினர் தமது நன்றிகளை தெரிவித்தள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments