புத்தளத்தில் இறைபணியாற்றிய என்டன் வைமன் குரூஸ் இரத்தினபுரி ஆயராக திருநிலைபடுத்தப்பட்டார்
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன் மற்றும் கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)
இரத்தினபுரி ஆயராக (Bishop) Rt. Rev. Dr. என்டன் வைமன் குரூஸ் சனிக்கிழமை (01) திருநிலை படுத்தப்பட்டார்.
ஆயர் வைமன் குரூஸ் சிலாபம் புனித பேர்னதெத் (St. Bernadette) தமிழ் மகாவித்தியாலயத்தில் பயின்றவர்.
புத்தளம் மாவட்டத்தில் மாம்புரி, தலவில், கட்டைக்காடு ஆகிய பங்குகளில் (Parish) இறைபணியாற்றியவர்.
அவர் புத்தளம் பிரதேசத்தில் சேவையாற்றிய காலப்பகுதியில் பிரதேச சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு காட்டிய கரிசனை மறக்க முடியாதது. மாம்புரியில் உள்ள வீதி ஒன்றுக்கு அன்னாரின் பெயர் சூட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாதம்பை SEDEC நிறுவனத்தில், புத்தளம் கல்வி வலய தமிழ்ப் பிரிவினால், அதிபர்களுக்காக வதிவிட செயலமர்வுகளை வருடாந்தம் நடத்தியவேளை, 2017 ஆகஸ்ட் காலப்பகுதியில் செயலமர்வை நடத்தியபோது அவர் அங்கு பொறுப்பாளராக இருந்து ஏற்பாட்டு குழுவுக்கு அவ்வமயம் அன்னார் பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்.
மேற்றாணியார் அருட் பணி என்டன் வைமன் குரூஸ் அடிகளாரின் அருட்பணி சிறக்க மனப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக இவரது ஆசானும், புத்தளம் வலய கல்வி பணிமனையின் ஓய்வு நிலை பிரதிக் கல்வி பணிப்பாளருமான இஸட்.ஏ. சன்ஹீர் தெரிவித்துள்ளார்.
No comments