Breaking News

இலங்கை ஹஜ் ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் ACBM. கரீம் விடுத்துள் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி

இப்றாஹீம் நபி மற்றும் அவரது குடும்பத்தின்  இறை நம்பிக்கை, தியாகம், அர்ப்பணிப்பு மற்றும் பொறுமை ஆகியவைகள் நினைவு கூறப்படுகிற ஈகைத் திருநாளாம் புனித ஹஜ் கடமையை உலக முஸ்லிம்களுடன் ஒன்றினைந்து  கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக ஸ்ரீலங்கா ஹஜ் பயண ஏற்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் ஏ.சீ.பீ.எம்.கரீம் தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையானது ஹஜ்ஜாகும். பொருளாதார வசதியும் உடல் ஆரோக்கியமும் கொண்ட இஸ்லாமியர்கள் தமது வாழ்நாளில் ஒரு முறையேனும் 'ஹஜ்' என்னும் புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது இறைக்கட்டளை மற்றும் நபிமொழியாகும்.


சமத்துவம் மற்றும் நல்லிணக்கம் போன்ற அம்சங்களை கடைபிடித்து வாழவேண்டும் என்பது புனித   ஹஜ்ஜுப் பெருநாள் எமக்கு வழங்கும் முக்கிய செய்தியாகும்.


இந்த ஆன்மீக பெறுமானங்களினால் இலங்கை சமூகத்தை மென்மேலும் வளப்படுத்தி,  அனைத்து இலங்கையர்களும் ஒரே குடும்பம் போன்று ஒற்றைமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ இப்புனித ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் நாம்  உறுதிபூணுவோம்.


இவ்வருடம் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற  வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்த எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி செலுத்தும் அதேவேளை, இலங்கையில் இருந்து 3500 க்கும் அதிகமான ஹாஜிகளுக்கு புனித கடமை நிறைவேற்ற சந்தர்ப்பம் வழங்கிய சவுதி அரசாங்கத்துக்கும் மன்னருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




No comments

note