வலய மட்ட சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா மாணவர்கள் 8 பேர் மாகாண மட்டத்திற்கு தெரிவு
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம். யூ.எம் சனூன்)
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பாடசாலை மாணவ மாணவிகளுக்கு இடையிலான புத்தளம் வலய சதுரங்கப் போட்டியில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 8 மாணவ மாணவியர் வெற்றி பெற்று மாகாண மட்டப் போட்டிகளுக்குத் தெரிவாகியுள்ளனர்.
மேற்படி புத்தளம் வலய பாடசாலைகளுக்கு இடையிலான சதுரங்கப் போட்டி கடந்த 22 மற்றும் 23ஆம் திகதிகளில் புத்தளம் ஆனந்தா தேசிய கல்லூரியில் இடம்பெற்றது.
கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் 13 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆத்திப் 15 வயதுக்குற்பட்ட பெண்கள் பிரிவில் எம்.எஸ்.எப். சபீஹா 2ஆம் இடத்தையும் 15 வயதுக்குற்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆதில் ஹசன் ஐந்தாம் இடத்தையும் மற்றும் எம்.எம். மயிஸ் அஹமட் ஏழாம் இடத்தையும் 17 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் எம்.ஆர். ஆயிஷா மூன்றாம் இடத்தையும் 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில் எம்.ஏ.எம். ஆஷிப் 2ஆம் இடத்தையும், எஸ்.டி. இத்தர்ஷனன் 3ஆம் இடத்தையும், எம்.எஸ்.எம். சியாப் நான்காம் இடத்தையும் பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தகுதி பெற்று கற்பிட்டி நகருக்கும் பாடசாலைக்கும் பெறுமை சேர்த்துள்ளதாகவும் இம்மாணவர்களின் வெற்றிக்காக பாடுபட்ட ஆசியர்களான அன்பஸ், பைசல், றியாஜ் ஆசிரியைகளான சகீலா, ஹிசானா, அஸ்ரிபா, அமிறுன்நிசா ஆகியோருக்கும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலையின் பிரதி அதிபர் எஸ்.எப் சாஜினாஸ் தெரிவித்துள்ளார்.
No comments