Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27 வது வருடாந்த மாநாட்டில் 11 சிரேஷ்ட ஊடகவியலாளர் கள் கௌரவிப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 27வது வருடாந்த மாநாடு ஞாயிறு (30) கொழும்பு மருதானை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் போரத்தின் தலைவர்என்.எம் அமீன் தலைமையில் இடம்பெற்றது. 


இம் மாநாட்டில் 11 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்  போரத்தினால் கௌரவிக்கப்பட்டனர். 


கௌரவிக்கப்பட்டோர் விபரம்


சன்டே ஜலன்ட் பத்திரிகையின் ஆசிரியர் -மெனிக் டி சில்வா, 


ஆசிரியை , இ.ஒ.ப.கூட்டுத்தாபன தயாரிப்பாளர் அறிவிப்பாளர் புர்கான் பீ.இப்திகார்,


வீரகேசரி பாராளுமன்ற செய்தியாளர் எம்.எஸ்.அமீர் ஹூசைன்,


வசந்தம்,தொலைக்காட்சி ,வசந்தம் வானொலி தமிழ் செய்தி பொறுப்பாசிரியர் சித்தீக் ஹனீபா,


பிறை எப்.எம். வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பசீர்.அப்துல் கையும், 


தினகரன் முன்னாள்  இணை ஆசிரியர், சுஜப்.எம். காசீம்,


தினகரன் முன்னாள் விளையாட்டு செய்தி ஆசிரியர்.நவமனி, உதயம் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஸிராஜ் எம். ஸாஜஹான், 


மாத்தறை கொடப்பிட்டிய ஆசிரியர் பிராந்திய ஊடகவியாளர் எம்.எம்.எம். பஷீர், 


தகவல் உரிமைச் சட்டத்தினை வினைத்திறனாக பயன்படுத்தியமைக்கான ஊடகவியல் பயிற்சிநெறி பயிற்றுவிப்பாளர் விடியல் இணையத்தளத்தின் ஆசிரியர் றிப்தி அலி ஆகியோர்கள் 


இந் நிகழ்வில் பிரதம அதிதியாக ஜக்கிய நாடுகள் இலங்கைகான இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரு பிராண்ஸ்,  கெளரவ அதிதியாக ஈரான் இஸ்லாமியக் குடியரசின் இலங்கைக்கான துாதுவர் கலாநிதி அலிராசா டெல்க்கோஸ், பிரதான பேச்சாரள் இந்திய முஸ்லி லீக்கின் பொதுச் செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ கே.ஏ.எம். முஹம்மத் அபுபக்கர்,  பிரதான பேச்சாளராக சமுக சேவையாரள் எம்.எல்.எம். மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மேலும் வடமேல் ஆளுநர் நசீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம். ஏ.எச்.எம். பௌசி (பா.உ) முன்னாள் கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், முன்னாள் பா. உ ரஜப்தீன், இந்திய உயர்ஸ்தானிகர் ஆலயத்தின் ஊடகச் செயலாளர் பானு எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைவர் குமார் நடேசன் மீடியாபோரத்தின் பொருளார் எம்.எம்.ஜெஸ்மின், செயலாளர் சிஹார் அனீஸ் ஆகியோர்கள் உட்பட   இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் போரத்தின் உறுப்பினர்கள் மண்டபம் நிறைந்து காணப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

















No comments

note