Breaking News

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 2024-2025 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகம் தெரிவும் போரத்தின் சஞ்சிகை வெளியீடும்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ், புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 27 வது வருடாந்த மாநாடு 30.06.2024 கொழும்பு தலைமை தபால் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் போரத்தின்  தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெற்றது.


போரத்தின் 2024  - 2025 ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களுக்கு அமைய வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றது அதன்படி மீண்டும் தலைவராக என்.எம் அமீன் பொதுச் ,செயலாளராக சாதிக் சிஹான், பொருளாளராக  கியாஸ் ஏ புகாரி  தெரிவு செய்யப்பட்டனர்.


 2024 - 2025ஆம் ஆண்டுக்கான நிர்வாகக் குழுவுக்கு  வாக்களிப்பு மூலம்  பின்வரும் 15 பேர் தெரிவு செய்ய்பட்டனர்.

சிஹார் அனீஸ், அஷ்ரப் ஏ சமத், இர்சாத் ஏ காதர், சம்ஸ் பாகிம், எம்.ஏ எம்.நிலாம். றிப்தி அலி, எம்.எப் றிபாஸ்,  அஸ்கர் ஆதம் றம்சி குத்துாஸ், சமீஹா சபீர், அத்தீபா தவ்சீர்,  பரீட் இக்பால்,  எஸ்.எம்.எம்.முஸ்தபா மௌலவி, ஜாவித் முனவ்ர், எம்.ஜ. நிசாமுடீன் ஆகியோர்கள்  தெரிவு செய்யப்பட்டனர்.


மேலும் ஸ்ரீலங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் 27 வது மாநாடு பற்றிய விபரங்கள் மற்றும் கடந்த வருடத்தின் செயற்பாடுகள் பற்றிய விபரங்கள் உள்ளடக்கிய சஞ்சிகையும் வெளியிடப்பட்டது.










No comments

note