Breaking News

புத்தளம் கூட்டமைப்பில் இணையும்படி NPPக்கு தூய தேசத்திற்கான இயக்கம் அழைப்பு

ஓரிரு வாரங்களுக்கு முன்னால் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களுக்கும், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் முனீர் முலப்பர் அவர்களுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று கத்தார் Sheratonல் நடைபெற்றது. 


இந்த கலந்துரையாடலில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே இருக்கின்ற உறவுகள் பற்றி பேசப்பட்டதோடு, எதிர்காலத்தில் புத்தளம் மாவட்ட அரசியலுக்குள் எவ்வாறு பயணிப்பது பற்றியும் பேசப்பட்டிருக்கிறது. குறிப்பாக வரப்போகின்ற பாராளுமன்ற தேர்தலில் பொது கூட்டமைப்பு ஒன்று தான் மாத்திரமே பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை சகோதரர் இஷாம் மரிக்கார் தெளிவாக முன் வைத்திருக்கிறார். 


தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி மிக வேகமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்றும், பாராளுமன்றத் தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் தமது கட்சி தனித்து களம் இறங்குவதற்கான ஏற்பாடுகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் முனீர் முலப்பர் தெரிவித்திருக்கிறார். 


கலந்துரையாடலின் இறுதிப் பகுதியில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்களினால், புத்தளம் மாவட்டத்தில் இருக்கின்ற சமய சமூக சிவில் தலைமைகளால் பாராளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட இருக்கின்ற பொதுக் கூட்டமைப்பிலே " தேசிய மக்கள் சக்தி ஒன்று இணைய வேண்டும்" என்ற உத்தியோகபூர்வ வேண்டுகோளினை எழுத்து மூலமாக சமர்ப்பித்தார். 


2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க போட்டியிட்ட திசை காட்டி சின்னத்திற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சமூக ஊடகத்தில் தூய தேசத்திற்கான இயக்கத்தின் தலைவர் இஷாம் மரிக்கார் அவர்கள் அக்காலப் பகுதியில் வேண்டுகோள் விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.





No comments

note