ஜனாஸா அறிவித்தல் - கொத்தாந்தீவு - ரஹ்மத்புரத்தைச் சேர்ந்த தேசகீர்த்தி எம்.எஸ்.பரீத் JP (றீகல் பற்பொடி உரிமையாளர்) காலமானார்...!
ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு நீராவிப்பிட்டியை பிறப்பிடமாகவும் புத்தளம் கொத்தாந்தீவு ரஹ்மத்புரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட றீகல் பற்பொடி உரிமையாளர் தேசகீர்த்தி எம்.எஸ். பரீத் JP (ஓய்வு பெற்ற சுகாதார உத்தியோகத்தர்) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னார் காலஞ் சென்றவர்களான முஹம்மது சுல்தான் மற்றும் செய்னம்பு ஆகியோரின் அன்பு மகனும் வானூன் என்பவரின் அன்பு கணவரும் , பௌஸி (மதுரங்குளி விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்), ரஸீலா, அஸீஹா ஆகியோரின் அன்புத் தந்தையும் நௌபர் (சமுர்த்தி உத்தியோகத்தர்), ஹனீஸ், அஸானா ஆகியோரின் மாமனாரும் றஸீன், பரீன், ஜெமீல், ஜென்னத், நஜீமா , மரஹூமா ரம்சியா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை (18.05.2024) காலை 09 மணிக்கு கொத்தாந்தீவு ரஹ்மத்புரம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வுலக வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து மறுமையின் நிலையான வாழ்வினை தெரிவு செய்த இச்சகோதரருக்கு அல்லாஹ் ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற உயர்ந்த சுவனத்தை வழங்குவதோடு! அவரது குடும்பத்தார்களுக்கு பொருமையையும் மன அமைதியையும் கொடுப்பானாக.
اللَّهُمَّ اغْفِرْ لَهُ ، وارْحمْهُ ، وعافِهِ ، واعْفُ عنْهُ ، وَأَكرِمْ نزُلَهُ ، وَوسِّعْ مُدْخَلَهُ واغْسِلْهُ بِالماءِ والثَّلْجِ والْبرَدِ ، ونَقِّه منَ الخَـطَايَا، كما نَقَّيْتَ الثَّوب الأبْيَضَ منَ الدَّنَس ، وَأَبْدِلْهُ دارا خيراً مِنْ دَارِه ، وَأَهْلاً خَيّراً منْ أهْلِهِ، وزَوْجاً خَيْراً منْ زَوْجِهِ ، وأدْخِلْه الجنَّةَ ، وَأَعِذْه منْ عَذَابِ القَبْرِ ، وَمِنْ عَذَابِ النَّار
தகவல் மகன் பௌசி
மதுரங்குளி விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்
No comments