Breaking News

பதவி உயர்வு பெற்று புதிய பதவியைப் பொறுப்பேற்றார் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பைஸல் ஆப்தீன்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தில் 15 மாதங்களுக்கு மேல் சேவையாற்றிய முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தீன் பதவி உயர் பெற்று கிழக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகத்தில் இன்று  புதன்கிழமை (15) கடமையைப் பொறுப்பேற்றார்.


அதேநேரம் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில்  பணிப்பாளராக இருந்து முஸ்லிம் சமூகத்தினதும் நாட்டினதும் நலனில் அக்கறை கொண்டு குறுகிய காலத்தில் அரும் பெரும் சேவையாற்றிய முன்னாள் பணிப்பாளர் இஸட். ஏ.ஏம். பைஸலுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வும் நேற்று செவ்வாய்க்கிழமை (14)  திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் நலன்புரி சங்கம் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.


அரநாயக்க தல்கஸ்பிடியவைச் சேர்ந்த இவர், அரநாயக்க பிரதேச செயலாளராக 7 வருட  காலம் பணிபுரிந்து பெரும்பான்மை மக்களின் அபிமானத்தை வென்று அம்மக்களால் மிகவும் விரும்பத்தக்க ஒரு அதிகாரியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பதவி உயர்வு பெற்று செல்லும் முன்னாள் பணிப்பாளர் பைசல் ஆப்தீனுக்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்கள் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதோடு, அவரது எதிர்காலம் சிறப்புற்று விளங்க பிராத்தனைகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.





No comments

note