விருதோடையில் பொது இடங்களில் வீசப்படும் கழிவுகள் நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள் ஆளுநரிடம் முறையிட்ட அமைப்பாளர் றபாத் அமீன்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
விருதோடையில் உள்ள மாடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் சேரும் கழிவுகள் மக்கள் நடமாடும் பொது இடங்கள், மணிகாரன் வீதி மற்றும் குளங்கள் என பல்வேறு இடங்களில் கொட்டப்படுவதனால் பொது மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் துர்நாற்றம் வீசுகின்றமை மற்றும் நீர் நிலைகளுக்குள் கழிவுகள் கொட்டப்படுவதனால்நீர் அசுத்தமடைவதுடன் நோய்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் உண்டு.
இவைகளை சுட்டிக்காட்டி சுகாதார பிரிவு அதிகாரிகள் மற்றும் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோரின் கவனத்திற்கு மேற்படி விடயம் அறிவிக்கப்பட்டும் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
எனவே மேற்படி விடயங்களை சுட்டிக்காட்டி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் இடம் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினரும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டாரவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் ஏ.ஆர்.எம் றபாத் அமீன் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments