விருதோடை பாடசாலை மைதானத்தில் விருந்தினர் அரங்கின் தேவைப்பாடு, ஆசிரியர் பற்றாக்குறை என்பவற்றை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்ற அமைப்பாளர் றபாத் அமீன்
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதான விருந்தினர் அரங்கு இன்மையையும் அதன் தேவைப்பாட்டையும் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டாரவிடம் கோரிக்கை முன்வைத்த அவரின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளரும் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினருமான ஏ.ஆர்.எம் றயாத் அமீன் அதனை உடனடியாக வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
விருதோடை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நீண்ட நாட்களாக விளையாட்டு மைதானம் இல்லாத நிலை காணப்பட்டது. எனினும் ஊர் பொது மக்கள் மற்றும் தனவந்தர்களின் முயற்சியின் மூலம் பாடசாலைக்கான விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. அம் மைதானத்தில் விருந்தினர் அரங்கு அமைத்து தருமாறு பாடசாலையின் அபிவிருத்திச் சங்கம் முன்னாள் கற்பிட்டி பிரதேச சபையின் உறுப்பினரும் ஐ தே.கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்க பண்டாரவின் புத்தளம் மாவட்ட முஸ்லிம் விவகாரங்களுக்கான செயலாளர் ஏ.ஆர்.எம் றபாத் அமீனிடம் வேண்டுகோள் முன்வைத்ததை அடுத்து அவர் ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
இதேவேளை மேற்படி விடயம் சம்பந்தமாக வடமேல் மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதோடு பாடசாலையில் காணப்படும் ஆங்கிலம், சித்திரம், கணிதம் மற்றும் உயர் தர பிரிவின் தமிழ் பாட ஆசிரியர்களுடன் நூலக உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகியோரின் தேவைப்பாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டது. இது விடயமாக புத்தளம் வலய கல்வி பணிப்பாளருடன் கலந்துரையாடி தீர்வுகளை பெற்றுதருவதற்கும் ஆளுநர் இணக்கம் தெரிவித்ததாக ஏ. ஆர். எம். றபாத் அமீன் தெரிவித்தார்.
No comments