Breaking News

பதக்கம் வென்ற புத்தளம் வீரர்களை வாழ்த்திய ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளம் மாவட்ட வீரர்களான ஆசிரியர் ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் துபைல் ஆகிய இருவரும் சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 10th Annual Master Athletics Championship விளையாட்டுத் தொடரில் கலந்துக்கொண்டு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்று புத்தளத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.


உயரம் பாய்தல் போட்டியில் M. F. M. ஹுமாயூன் ஆசிரியர்1.50 M உயரத்தை தாண்டி தங்கப் பதக்கத்தையும், எம்.எப்.எம் துபைல் ஆசிரியர் 100 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கத்தையும் வெற்றி கொண்டு புத்தளம் மண்ணுக்கு பெருமையை பெற்றுத் தந்துள்ளனர்.



ஹுமாயூன் ஆசிரியர் சென்ற வருடம் 1.60 m உயரத்தை தாண்டி இலங்கையில் சாதனை படைத்ததும் குறிப்பிடத்தக்கது. 


Long Jump- Brownz Medal லை வெற்றிக் கொண்டுள்ளார்.


இவர்களது இந்த அயராத தொடர் முயற்சிக்கும் வெற்றிக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் புத்தளம் நகர கிளை தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.




No comments

note