ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க ஒரு கோடி எழுபது இலட்சம் வாக்காளர்கள் தகுதி
(சியாஜ் மற்றும் சனூன்)
2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதித் தேர்தலில் சுமார் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த தொகையில் 18 வயதை பூர்த்திசெய்த 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளடங்குவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடுகள் தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாளையுடன் இவ் வேளைகள் நிறைவடையும் எனவும் தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
No comments