வடமேல் மாகாண ஆளுநரை சந்தித்த ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் எம்.யூ.எம் சனூன்)
குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகத்துறை இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார, வட மேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடியதுடன், பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.
பொது மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொண்டு, அதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதில் கரிசனையுடன் செயற்படும் வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமடிற்கு இதன் போது இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
Post Comment
No comments