Breaking News

ஜம்மியத்துல் உலமா புத்தளம் நகர கிளை ஏற்பாட்டில் மணத்தீவில் வெள்ள பாதிப்புக்குட்பட்ட இந்து மக்களுக்கு பகல் போசணம்

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக மணத்தீவு சேவந்தீவில் வசிக்கும் சுமார் 75 இந்து மத குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சர்வமத குழு தலைவர் அப்துல்லாஹ் ஹஸ்ரத் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையினருக்கு சுட்டிக்காட்டியதற்கு இனங்க வேண்டியதிற்கினங்கநேற்று (21)மணத்தீவு சேவந்தீவில் வசிக்கும் 75 இந்துமத சகோதரர்களுக்கு பகல் போசணம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


மேற்படி கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாது பாதை முழுமையாக நீரில் முழ்கியுள்ளமையினால்  அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தள நகர கிளை உலமாக்கள் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு வெள்ள நீருக்குள் நடந்து சென்று பகல் போசணம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
















No comments

note