Breaking News

துணிச்சல் மிக்க ஒரு தலைவரை உலகம் இழந்துள்ளது - ஈரான் ஜனாதிபதி மரணம் தொடர்பில் கலாநிதி இல்ஹாம் மரிக்கார் இரங்கல் குறிப்பு

கடந்த 19 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்றாஹிம்  ரைசி ஹெலிகப்டர் விபத்தில் மரணமானதையடுத்து இலங்கையில் அமைந்துள்ள ஈரான் துாதுவரலாயத்திற்கு அரசியல், மத, சமூக துறைசார் முக்கிய பிரதி நிதிகள் சென்று அங்கு வைக்கப்பட்டுள்ள அனுதாப ஏட்டில் தமது கவலையினை ஈரான் அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில் கொழும்பு 7 இல் அமைந்துள் ஈரான் துாதுவராலயத்துக்கு சென்ற அமேசன் கல்வி நிலையத்தின் ( Amazon College and Amazon Compus)   நிறைவேற்று பணிப்பாளரும்,சமூக சேவையாளருமான கலாநிதி இல்ஹாம் மரைக்கார் அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கள் பதிவேட்டில் மர்ஹூம் இப்றாஹிம் ரைசியின் துணிச்சலான தீர்மானங்ள் தொடர்பில் தமது பதிவினை இட்டார்.


மேலும் அவரது சுவன வாழ்வுக்காக பிரார்த்திப்பதுடன், ஈரானின் பதில் ஜனாதிபதியாக நியமனம் பெற்றுள்ள கலாநிதி மொஹம்மட் மெதக்பர் அவர்களுக்கு தமது வாழ்த்துக்களையும்  தெரிவித்தார்.


அத்துடன், ஈரான் நாட்டு மக்களும் அரசாங்கமும் தற்போது எதிர் கொண்டுள்ள கவலையான தருணத்தில் இலங்கையர்களும் இணைந்து கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இதன் போது இலங்கைக்கான ஈரான் நாட்டின் துாதுவர் டாக்டர்.அலி ரீசா டெல்கோஷ் ( Dr.Alireza Delkhosh) அவர்களை சந்தித்து தமது கவலையினை வெளியிட்டார்.







No comments

note