கற்பிட்டி ஆண்டாங்கேணி பகுதியில் விபத்து.
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
கற்பிட்டி நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ரக வாகனமும் பின்னால் சென்ற கூலரும் மோதுண்ட விபத்து இன்று பிற்பகல் கற்பிட்டி பாலாவி பிரதான வீதியில் ஆண்டாங்கேணி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு வாகனங்களும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வாகன சாரதிகள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments