Breaking News

வெற்றி வீரர்களான ஆசிரியர்கள் இருவருக்கும் புத்தளம் முக்கூட்டு தலைமை வாழ்த்து.

(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)

புத்தளம் நகரை சேர்ந்த விளையாட்டு துறை பொறுப்பாசிரியர்களும், சகோதரர்களுமான ஆசிரியர் எம்.எப்.எம்.  ஹுமாயூன் மற்றும் ஆசிரியர் எம்.எப்.எம்.துபைல் ஆகிய இருவரும் சுகதாச விளையாட்டரங்கில் நடைபெற்ற 10th Annual Master Athletics Championship விளையாட்டுத் தொடரில் கலந்துக்கொண்டு வெற்றியடைந்து சாதித்துள்ளனர்.


உயரம் பாய்தல் போட்டியில் ஹுமாயூன் ஆசிரியர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார். இவர் 1.50 மீ. உயரத்தை தாண்டி இந்த தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொண்டார். 


இவர் சென்ற வருடம் 1.60 மீ உயரத்தை தாண்டி இலங்கையில் சாதனை படைத்தமை குறிப்பிடத்தக்கது. 


இதே வேளை இவர் நீளம் பாய்தல் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை யும் பெற்றுக்கொண்டார்.


அதே போன்று ஆசிரியர் 

துபைல் 100 மீ. ஓட்டப்போட்டியில் போட்டியில்  வெள்ளிப் பதக்கத்தை  வெற்றிக்கொண்டு புத்தளம் மண்ணுக்கு நாடளாவ ரீதியில் பெருமையினை பெற்றுத்தந்துள்ளார்கள்..


இவர்களது இந்த அயராத தொடர் முயற்சிக்கும் வெற்றிக்கும் புத்தளம் நகரின் முக்கூட்டு தலைமைகளான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் புத்தளம் நகர சபை என்பன தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.





No comments

note