மதுரங்குளி - கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டிட திறப்பு விழா!.
(புத்தளம் எம்.யூ.எம்.சனூன், கற்பிட்டி எம்.எச்.எம்.சியாஜ்)
மதுரங்குளி கனமூலை தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் புதிய கட்டட திறப்பு விழா 18 ஆம் திகதி சனிக்கிழமை காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக
முஸ்லிம் ஹேன்ஸ் (Muslim Hands) அமைப்பின் இலங்கைக்கான பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எம். மிஹ்ழார் (நளீமி) அவர்களும், கௌரவ அதிதியாக அஷ்ஷெய்க் இஸட்.பீ.எம். அப்துல் ரஹ்மான் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எச்.எம். றியாஸ், எஸ்.எச்.எம். நியாஸ், என்.டீ.எம்.தாஹீர், கற்பிட்டி பிரதேச சபை முன்னாள் தலைவர் எம்.எஸ்.சேகு அலாவுதீன் (அன்ஸார்), முன்னாள் கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் கே.எம்.எம். பைஸர் மரிக்கார், புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீம், கவிஞர், கவிப்புயல் ஹாமித் எம்.சுஹைப் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதேவேளை பிரதம அதிதிக்கு தாருஸ்ஸலாம் வைத்திய நிலையத்தின் சார்பில் அதன் தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) அவர்களினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதே போன்று கௌரவ அதிதி மற்றும் வைத்திய நிலையத்தின் வைத்தியர் ஆகியோருக்கும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது அதிதிகளுக்கு பொன்னாடைகளும் போர்த்தி வைக்கப்பட்டன.
புத்தளம் மாவட்ட சமாதான நீதிவான்கள் பேரவையின் தலைவர் எச்.எம்.சபீக், தாருஸ்ஸலாம் ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் ஏ.டீ.எம். முஸம்மிலுக்கும், ஜனாஸா நலன்புரி சங்க உறுப்பினர் நவாஸ்தீன் பிரதம அதிதி எம்.எம்.மிஹ்லாருக்கும், ஜனாஸா நலன்புரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வைத்திய நிலைய தலைவர் அஷ்ஷெய்க் எச்.எச்.எம். நஜீம் (ஷர்கி) ஆகியோர் பொன்னாடைகளை போர்த்தி கௌரவித்தனர்.
No comments