Breaking News

புத்தளம் ஜம்மியத்துல் உலமாவின் வெள்ள நிவாரண பணி தொடர்கிறது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)

புத்தளத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக புத்தளம் நகர எல்லையில் பல இடங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.


ஆகவே IBM Hall ல் சமைத்து கொடுப்பவர்களை நேரடியாக சந்தித்து மஸ்ஜிதுல் குபா மஸ்ஜிதுல் அக்ஸா மஸ்ஜிதுல் அல் அமீன் பகுதிகளுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தள நகர கிளையின் ஊடாக உணவு போசணங்களை விநியோகம் செய்யுங்கள் என்று வேண்டியத்திற்கு இனங்க


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் புத்தளம் நகர கிளையினால் இரண்டாம் நாளும் 20.05.2024 மஸ்ஜிதுல் அக்ஸா (இல்லியாஸ் வத்தை) மஸ்ஜிதுல் அல் அமீன் (இருவது வீடு)  மஸ்ஜிதுல் குபா (குபா பகுதி) வாஹித் பள்ளியின் சில பகுதிகளுக்கு 500 குடும்பங்களுக்கு தேவையான பகல் போசணம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.


அதே போன்று இரவு போசணம் கிராம உத்தியோகத்தரின் உதவியுடன் 450 குடும்பங்களுக்கான இரவு போசணமும் மஸ்ஜிதுல் குபா மஸ்ஜிதுல் அக்ஸா மஸ்ஜிதுல் அல் அமீன் பகுதிகளுக்கு கடையாகுளம் சில பகுதிகளுக்கு 400 குடும்பங்களுக்கான இரவு போசணமும் வழங்கி வைக்கப்பட்டன.


அனைத்து உலமாக்களும் ஒவ்வொரு வீடாக சென்று உணவு பொதிகளை கொடுத்து விட்டு வந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தள நகர கிளையின் உணவு சமைக்கும் இடமாக புத்தளம் மஸ்ஜிதுர் ரஹ்மான் காணப்படுகிறது.


இன்றும் (21) பகல் போசணம் 500 குடுமபங்களுக்கும் இரவு போசணம் 600 குடும்பங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் மிகவும் மகிழ்ச்சியுடன் அறிய தருகிறோம்.


சமூக ஆர்வலர்கள் சேவையாளர்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (21) மஸ்ஜிதுர் ரஹ்மானுக்கு வருகை தருமாறு தாழ்மையாக வேண்டிக்கொள்கிறோம்


அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தள நகர கிளை

















No comments

note