தாராக்குடிவில்லு காபட் பாதைக்கான அடிக்கல் நாட்டு விழா
(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் மற்றும் புத்தளம் எம்.யூ.எம் சனூன்)
முந்தல் , அக்கரவெளி, தாராக்குடிவில்லு பாடசாலை வீதியை காபட் பாதையாக புணரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா எதிர்வரும் 2024/05/13 ம் திகதி திங்கட்கிழமை முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸ் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆராச்சிகட்டுவ முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் காலஞ்சென்ற சீ.எம் எம் சரீபின் வேண்டுகோளின் பெயரில் முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் றியாஸின் மேற்பார்வையின் கீழ் காலஞ்சென்ற முன்னாள் நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த பெரேராவின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இடம்பெற உள்ள முந்தல் செயலகப் பிரிவின் அக்கரவெளியின் தாராக்குடிவில்லு பாடசாலை வீதியை காபட் இடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா
இதில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான சிந்தக மாயாதுன்னே மற்றும் சனத் நிசாந்த பெரேராவின் பாரியாரும் சட்டத்தரணியுமான சாமரி பிரியங்கா ஆகியோர் கலந்து சிறப்பிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments